http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மூடப்பட்ட சீன தூதரகத்துக்குள் நுழைந்த அமெரிக்க  பொலீஸ்

செவ்வாயன்று ஹூஸ்டனில் உள்ள  சீனாவின் துணை தூதரகத்தின் “அனைத்து நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் நிறுத்த” அமெரிக்கா சீனாவுக்கு சுமார் 72 மணிநேரம் அவகாசம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரக வளாகத்திற்குள் நுழைந்தன.

கருப்பு எஸ்யூவிகள்,   லொறிகள்  , இரண்டு வெள்ளை வேன்கள் மற்றும் ஒரு பூட்டு தொழிலாளி வேன் ( locksmith’s van) ஆகியவை  இராஜதந்திர வளாகத்தின் வளாகத்திற்குள் நுழைந்துள்ளது


டெக்சாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த மோசடி விசாரணையில் தூதரகம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்,   தூதரக அதிகாரிகளே ஆராய்ச்சியாளர்களுக்கு எந்தெந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் எப்படி அனுப்ப வேண்டும் என்று அனைத்து  நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு இருப்பதாக அமெரிக்க பொலீஸ் அங்குள்ள செய்தியாளர்களிடம்  கூறியுள்ளது.

உலகின் முக்கிய சக்திகளான அமெரிக்காவும் சீனாவிற்கும் இடையே நடைபெறுகின்ற இந்த பனிப்போர் கொடிய வைரஸ் பரவும் காலகட்டத்தில் உலநாட்டு மக்களை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கும் நடவடிக்கையாகவே வல்லுநர்களால் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *