தாரை வார்க்கப்பட்ட தேசிய வளங்களை மீட்பேன்; பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ
மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்ட தேசிய வளங்களை எப்படியேனும் எதிர்கால சந்ததியினருக்காக கையகப்படுத்தி தருவதற்கான முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தெரிவித்தார்

மேலும் அவர் இங்கு குறிப்பிடுகையில்,
சர்வதேச நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது என்பது இது மிகவும் எளிதான காரியம் அல்ல. இவர்களுடன் முரண்படாமல் ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதற்கு நாம் முயற்சிப்போம்.
விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும், பாரம்பரிய உற்பத்திகளை சர்வதேசத்தில் அடையாளப்படுத்வும் வேண்டுமாயின் நாம் நமது தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பிக்கும் பொழுதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு தொடர்பாக முப்படையிரை வைரஸ் ஒழிப்பிற்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் ஈடுப்படுத்தினார்.
இவர் முன்னெடுத்த விசேட செயலணி மூலமாக எம்மால் இன்றைக்கு அந்த வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்து வெற்றி பெற முடிந்தது. எனவே தூரநோக்கு சிந்தனைகளால் மட்டுமே மிகப்பெரிய சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய அதே ஆதரவை நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் வழங்கி எம்மை வெற்றி பெற வைத்தால் மட்டுமே நாடு மேற்கூறிய இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.
