http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புதிய ஆபத்து – அமெரிக்காவில் மூளை பாதிப்பு நோய்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நெக்லேரியா பவுலரி என்ற மனித மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மிதமான வெப்பநிலையில் உள்ள நல்ல நீரில் இந்த கிருமி இருக்கும். மனிதர்கள் உடலில் பல அணுக்கள் உள்ளன. அதே நேரத்தில் அமீபா என்பது ஓரணு உயிரி.

மூக்கின் மூலமாக உடலுக்குள் புகுந்து மூளையை சென்றடையும். இந்த அமீபா மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் துவங்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. மிகவும் அபூர்வமான இந்த நோயால் சமீபத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏரி குளம் நீச்சல் குளம் போன்றவற்றில் குளிக்கும்போது மூக்கின் வழியாக நீர் உள்ளே செல்வதை தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தலைவலி காய்ச்சல் வாந்தி கழுத்து வலி ஆகியவையே இதன் அறிகுறிகளாகும்.

மேலும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நினைவு இழப்பது குழப்பங்கள் ஏற்படுவது வலிப்பு நோய் உடல் கட்டுப்பாட்டை இழப்பது ஆகியவையும் ஏற்படும். புளோரிடாவில் 1962ல் இருந்து இதுவரை 37 பேருக்கு இந்த அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் 1962 – 2018 காலகட்டத்தில் 145 பேரை இந்த நோய் தாக்கியது. அதில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். தற்போது புளோரிடாவில் இது தென்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *