http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் சயீல் ஆஸ்வாலை ஆர்யா பட நடிகை சமிக்ஷா திருமணம்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சமிக்ஷா நடிப்பின் மீதான ஆர்வத்தால் மும்பைக்கு வந்து வாய்ப்புகள் தேடினார். புரி ஜெகன்நாத்தின் 143 தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் சமிக்ஷா. ஆர்யா, நவ்தீப் உள்ளிட்டோர் நடித்த அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், தீ நகர், முருகா, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமிக்ஷா தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து வந்தார். சமிக்ஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிரணாம்(2019).

சமிக்ஷா படங்கள் தவிர்த்து இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் சமிக்ஷாவுக்கும், சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வாலுக்கும் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *