சுஷாந்த் சிங் சிங்கின் கடைசி பட டிரெய்லர் உலக சாதனை படைத்தது
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுஷாந்த் சிங்குடன் சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள். இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு யூடியூபில் வெளியான சினிமா ட்ரைலர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ட்ரைலர் மொத்தமாக 36 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது
.
