மலையக மக்களின் வீட்டு பிரச்சினைக்கு காரணமாக இருப்பது காணி உரிமையின்மையே ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.
மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு காரணமாக இருப்பது காணி உரிமையின்மையே காணி உரிமையினை பெற்றுக்கொண்டால் எமக்கு தேவையான வீடுகளை நாமே கட்டிக்கொள்ளலாம் இன்று உங்கள் பிள்ளைகள் எத்தனையோ பேர் வெளி நாட்டில் இருப்பார்கள் அவர்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையிருக்கும் காணி இல்லாததால் தான் அதிகமானவர்கள் இன்று வீடுகள் இன்றி இருக்கிறார்கள்.குறிப்பாக தோட்டத்தில் காணி பெற்றுக்கொள்ள போனால் அவர் தோட்டத்தில் வேலையில்லை. என்கிறார்கள் இன்னும் சிலர் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இருப்பதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியினை இணைக்கும் பிரதான தோட்டப்பாதைகளில் ஒன்றான டெரிகிளையார் ஸ்டாளின் ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதை தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் இன்று (29) திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பாதை நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு மற்றும் ஒரு லட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நிமல் லன்சா அவர்களின் வழிகாட்டலில் குறித்த பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுமார் 3.93 கிலோ மீற்றர் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள குறித்த பாதைக்கு அரசாங்கம் சுமார் 78 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது. இவ்வீதி பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்;கையில்…அண்மையில் ஒரு அமைச்சர் வானொளி மூலம் பேட்டி கொடுத்திருந்தார் அவருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வரவு செலவு திட்டத்தில் தோட்ட மக்களுக்கு நிதி ஒதுக்கவில்லை அதனால் ஆயிரம் ரூபா கிடைக்காது பல்கலைக்கழகம் வராது,இது போன்று எதிர்மறையான விடயங்களையே சொல்லியிருக்கிறார்.அது வரா விட்டால் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதனை விடுத்து வராது முடியாது இயலாது என்று சொல்வது அவரின் இயலாமையே காட்டுகிறது.
நான் பதவி ஏற்று ஆறுமாதங்கள் ஆகின்றன. நீங்கள் நினைக்கலாம் ஏன் இன்னும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கவில்லை என்று ஆனால் தற்போது அவர்கள் கட்டிய பல வீடுகள் மிகவும்; குறைபாடான நிலையில் தான் உள்ளன முதலில் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து தான் வீடுகளை கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
உங்களுக்கு தெரியும் நான் அமைச்சு பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டில் கொரோனா பரவி பாரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது ஆனால் 2015 எனது அப்பா அமைச்சினை ஒப்படைக்கும் போது 3852 மில்லியன் ரூபா இருந்தது இந்திய வீடு எல்லாவற்றையும் கொடுத்து தான் வந்தார் அப்போது இவர்கள் என்ன செய்தார்கள்.அதே நேரம் அண்;மையில் நான் ஹட்டன் நகருத்திற்கு சென்று வந்தேன். அந்த படம் பத்திரிகையில் வெளியானது உடனே அந்த திட்டத்தினை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்கிறார்கள் அவர்களுக்கு என்ன திட்டம் என்று கூட தெரியாது ஆகவே இப்படி தான் எமது அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மலையகத்தின் பொருளாதார நகரம் ஹட்டன் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் அத்தோடு மலையக இளைஞர் யுவதிகளின் சுய தொழில் தேவைகளை ஊக்குவித்து அவர்களின் பொருதாரத்தினை உயர்த்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை நான் நிச்சயம் முன்னெடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
