http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நோர்வூட் நிவ்வெலிகம பகுதியில் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் திடீர் தீ 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெலிகம பகுதியில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் தீடீர் தீ காரணமாக 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (27) திகதி மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த தீவிபத்து காரணமாக 12 வீடுகளில் வாழ்ந்த 13 குடும்பங்களைச் சேர்;ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத் தீ விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படாத போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள் தளபாடங்கள்,உடுதுணிகள்,தங்க நகைகள் உட்பட அனைத்தும். தீக்கிரையாகியுள்ளன.


தீ மிக வேகமாக பரவியதனால் தீயினை கட்டுப்படுத்த முடியாது போயின இதனால் அனைத்து வீடுகளும் முற்றாக சேதமடைந்தன.


பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்டவர்கள் அயலில் உள்ள வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத் தீவிபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டடிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இத் தீ ஏற்பட்டதற்கான காரணத்தினையும் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *