http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலையக பாடசாலைகளில் பலத்த சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

மலையக பாடசாலைகளில் பலத்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு மத்தியில் தரம் ஆறு தொடக்கம் தரம் 13 வரையிலான பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (23) திகதி ஆரம்பமாகின.


இதன் போது மாணவர்கள் மிகவும் உட்சாகமாக முகக்கவசம் அணிந்து சுகாதார நெறிமுறைகளை பின் பற்றி பாடசாலைக்களுக்கு வருவது காணக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு மாணவரினதும் வெப்பம் அளக்கப்பட்டு கைகள் நன்கு கழுவப்பட்ட பின்பே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டன.


ஹட்டன் கல்வி வலயத்தில் 83 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று (23) நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான செயப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் வெலிஓயா பகுதியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதனால் மலைமகள் தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகியன தொடந்தும் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *