கொரோனாவினை கட்டுப்படுத்த தலைவாக்கலை லிந்து நகரசபையினாhல் விசேட கொரோனா செயலணி.
மலையக நகரங்களில் அதிகமாக திபாவளி தினங்களில் ஒன்று கூடும் நகரமாக ஹட்டன் தலவாக்கலை நகரமே காணப்படுகின்றன.இந்நிலையில் தலவாக்கலை நகரப்பகுதிக்கு வரும் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக இன்று (11) தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் லெ.பாரதிதாசன் தலைவமையில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக விசேட சொரோனா செயலணி; ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பது மற்றும் இனங்காண்பது தொடர்பான பயிற்சியினை வழங்கி அவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அங்கிகள் வழங்கி நகரத்திற்கு வரும் மக்களில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட மக்களின் உடல் உஸ்னத்தினை அளத்தல்,கைகளை தொற்று நீக்கம் முகம் கவசம் அணிய வலிறுத்துதல் பாதுகாப்பு சுகாதார பாதுகாப்பு நடை முறைகளை பின்பற்றுவதற்கு வலிறுத்துதல் போன்றன இன்று முதல் தீபாவளி முடியும் வரை கொரானா தொற்று கட்டுப்படுத்து செயலணி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் அங்குரார்பண நிழ்வு நகரசபையின் தலைவர் லெ.பாரதிதாசன் தலைமையில் தலைவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்தில் ஆரம்பமானது.
இது குறித்து நகரசபையின் தலைவர் லெ.பாரதிதாசன் கருத்து தெரிவிக்கையில்..
தலவாக்கலை ஹட்டன் நகர சபை என்பது மலையக மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும்.இந்நிலையில் இவர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கு உள்ளது.

ஆகவே கொழும்பு மற்றும் கொரோனா தொற்று பரவி உள்ள ஆபத்தான வலைய பிரதேசங்களில் இருந்த வரும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.காரணம் மலையகத்தில் எமது மக்கள் வாழும் வீடுகள் மிகவும் நெருக்கமாகவே காணப்படுகின்றன அத்தோடு எமது மக்களும் சமூகமாகவே வாழ்கின்றனர் இந்நிலையில் இந் நோய் பிரிவினால் அது பாரிய ஆபத்தை ஏற்படுத்தம் அதனால் எமது உறவுகளை இழக்க நேரிடும் சொத்தகளை வியாபாரத்தினையும் நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு நாம் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும. அத்தோடு எமது மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் எனவே இன்று ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இந்த தொற்றினை மலையகத்திலிருந்து நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார.; விழிப்புணர்வு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளார. அது மற்றும் அல்லாது பல தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பல லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை வழங்கியுள்ளார் எனவே இவற்றையெல்லாம் உணர்ந்து எமது மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆகவே வெளி மாவட்டங்களிலிருந்து வரும் எமது உறவுகள் தங்களது குடும்பங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முடிந்தளவு அநாவசியமாக வருகை தருவதனை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு இன்று பயிற்சி வழங்கிp மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எமது இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதே நேரம் இந்த செயலணியினை நடைமுறைபடுத்துவதற்காக ஒத்துழைத்த தலவாக்கலை வர்த்தக சங்கத்திற்கும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றினை தெரிவித்துகொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
