http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஜனாதிபதியும் பிரதமரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஏம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு.

நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொரோனா தொற்றினை ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தினார் அதனால் முழு உகமே அவரை பாராட்டியது.
இன்று இரண்டாவது கொரோனா தொற்று ஏற்பட்டு நாட்டில் இன்று பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பணிப்பாளர் பெசிஸ் ராஜபக்ஸ அவர்களும் இந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் இந்த நாடு சௌபாக்கிய பாதையில் செல்ல வேண்டும் என பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு  வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸவரன் தெரிவித்தார்.


நேற்று (08) கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் கொரோனா தொற்று நீங்குவதற்காக இடம்பெற்ற இறை பிரார்த்தனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..


நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி நாடு முழுவதும் எல்லா ஆலயங்களிலும் ஒரே நேரத்தில் இன்று பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.


அந்த நிகழ்களை மலையத்திலும் நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் கேடு;க்கொண்டதற்கிணங்க இன்று எமக்கும் இந்த பூஜைகளை நடத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை கொட்டகலை முத்து விநாயகர் பரிபாலன சபையினரும் மற்றும் ஆலய பிரதம குரு ஸ்கந்தராஜா சிவச்சாரியார் அவர்களும் சிறந்த முறையில் ஒழுங்கு செய்திருந்தனர்.


இன்று நாடு செழிபாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா மதத்தளங்களிம் இவ்வாறன நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே மக்கள் விழிபாக இருக்க வேண்டும் இந்த நோயிலிருந்து பாது காப்பு பெறுவதற்கான சகல நடவடிக்கைகளை பொது மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எனவே ஏனைய சமூகங்களைப்போல் மக்கள் பாதுகாப்பாக இருந்து நாட்டை சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டு மக்கள்  மறு;றும் உலக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்..இந்த வைரஸினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு வைத்திய சக்தி மற்றும் போதுமானதாக அமையாது என்பதனால் எமது தெய்வீக சகத்தியின் மீது நம்பிக்கை வைத்து நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டு மக்களிடம் சமயத்தலைவர்களிடமும் கொரோனா தொற்று நீங்க பூஜை வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கைக்கு அமைய மலையகத்தின் இந்து மற்றும் கிறிஸ்த்தவ இஸ்லாமிய ஆலங்களில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் கொட்டகலை முத்து விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.


விநாயகர் வழிபாடு விசேட பிணி நீக்கும் 27  மூலிகைகளை கொண்ட விசேட யாக பூஜை, இடம்பெற்றதுடன் அதில் 108 தடைவை மிருதஞ்ச பெருமானுக்கு நாம அர்ச்சினை இடம்பெற்றன.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பூஜை வழிபாடுகள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை பகதர்களே கலந்து  கொண்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பூஜை வழிபாடுகளை கொட்டகலை முத்தவிநாயகர் ஆலய பிரதம குரு ஸ்கந்தராஜா சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து கொரோனா ஒழிய வேண்டும் என விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத்,உட்பட பிரதேச வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *