http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 450 குடும்பங்களுக்கு ஜீவன் தொண்டமானால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்ட வீடமைப்பு ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொரோனா தொற்று காணரமாக தனிமைப்படுத்தப்ப்ட கொட்டகலை பிரதேச சபை பிரிவிக்குட்பட்ட சுமார் 450 குடும்பங்களுக்கு இன்று (02) உலர் உணவு பொருட்கள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் தலைமையில் வழங்கி வகை;கப்பட்டன.


இதன் போது கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட டிரோட்டன், கே.ஓ,பிரிவு, யுலிபீல்ட், அந்தோனிமலை, வூட்டன், கொட்டகலை ,குடாஓயா,உள்ளிட்ட பல தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இவ் நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சுமார் 6000 ரூபா பெறுமதியான இந் நிவாரணப்பொதியில் அரசி பருப்பு சோயாமீட், சீனி, கோதுமை மா உட்பட பல அத்தியசிய உணவு பொருட்கள் இதில் அடங்குகின்றன.


இது குறித்து பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் கருத்து தெரிவிக்கையில் கொரோனா தொற்று காரணமாக மலையக பெருவாரியான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூறு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இவர்கள் அனைவருக்கும் தற்போது உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இன்று (02) கொட்டகலை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் உலர் உணவு பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்து வருகிறோம்.
இந்த உணவு பொருட்களை பெற்றுக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.ஏன் என்றால் தோட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவினால் அது பாரிய பின் விளைவுகள் ஏற்படும்;.எனவே தான் யாரும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய யாரும் வெளியில் செல்ல கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வீடுகளுக்கே வந்து அதனை பெற்றுத்தருகிறோம்.எனவே நீங்கள் உங்களை பாதுகாத்து இந்த சமூகத்ததையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதே நேரம் இந்த நிவாரணப் பொருட்களை எனது வேண்டுக்கோளுக்கு அமைய பெற்றுக்கொடுத்த ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *