கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 142 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 142 குடும்பங்களுக்கு இன்று (01) திகதி வழங்கி வைக்கப்பட்டன.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்கமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 142 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று (01) கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் உறுப்பினர் நேசன் அவர்களினாலும் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

