ஹட்டன் நகரம் திறப்பதும் மூடுவதும் குறித்து முடிவில்லை மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு. வர்த்தகர்கள் திண்டாட்டம்.
ஹட்டன் நகரம் திறப்பதும் மூடுவதும் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை இது குறித்து இராணுவ தளபதியே முடிவு செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்டச்செயலாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.
ஹட்டன் நகரம் திறப்பது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்றியதனை தொடர்ந்து கடந்த 25ம் திகதி ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தும் நகரமாக அறிவிக்கப்பட்டன.
இந் நிலையில் மீன் வர்த்தகரின் நெருக்கமான உறவு வைத்திருந்தவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததனை தொடர்ந்து அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பி.சி,ஆர் முடிவுகள் வெளிவந்ததனை தொடர்ந்து ஹட்டன் நகரின் கடைகள் நேற்று (31) திறக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (01)ம் திகதி ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒருசில கடைகள் திறக்கப்படாது அறிவித்தல் வரும் வரை காத்திருப்பதாகவும் கடைகளை திறப்பதா? அல்லது மூடுவது என்பது குறித்து தெரியாத நிலையில் வர்த்தகர்கள் திண்டாடுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவரை கேட்ட போது பி,சி.ஆர் முடிவுகளின் பின் ஒரு சிலர் வந்து என்னிடம் மருந்துகளை பெற வேண்டும் அதற்கு கடைகளை திறக்குமாறு கேட்டுக்கொண்டார்கள் திடீரென நகரம் மூடப்பட்டமையினால் மருந்தகங்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக ஒரு சில கடைகளை மாத்திரம் பொருத்தமான விதத்தில் திறக்குமாறு தெரிவித்தேன். எனினும் அதிகமான அத்தியவசிய தேவைகள் அற்ற கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து எனக்கும் ஒன்றும் சொல்ல முடியாது இதனை இரானுவ தளபதியே தீர்மானிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து மாவட்டச் செயலாளர் புஸ்பகுமாரவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஹட்டன் நகரின் கடைகள் மூடுவது தொடர்பாகவோ திறப்பது தொடர்பாகவோ எனக்கு எதனையும் அறிவிக்கப்படவில்லை. இது கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இரானுவ தளபதிதான் அறிவித்திருக்கிறார்.ஆகவே அவர் அது குறித்து முடிவெடுக்க வேண்டும.; இது குறித்து நான் சுகாதார பிரிவினரிடம் கேட்ட போது ஹட்டன் நகரில் கடைகள் திறப்பதில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. என்றும். எனினும் இது தாங்கள் அறிவிக்காததால் இரானுவ தளபதியே முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொலிஸார் கேட்ட போதும் அவர்களும் கடைகளை மூடுமாரோ அல்லது திறக்குமாரோ தாங்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவி;ல்லை. என தெரிவித்ததாக மாவட்டச் செயலாளர் புஸ்பகுமார் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் வர்தகர்களும் பொது மக்களும் நகரில் கூடி என்ன செய்வதென்று தெரியாது திகைத்து போய் நிற்கின்றனர்.தற்போது ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட நகரமா இல்லையா என்ற நிலையில் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.
