கொட்டகலை பகுதியில் இரண்டு புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் மற்றும் கே.ஓ. பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமதாகவும் இவர்கள் இன்று (30) அம்பாறை கொவிட் 19 சிகிச்சைக்காக கொண்டு செல்வதாகவும் கொட்டகலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.கணேஸ் தெரிவித்தார்.

மீன் கடை கொத்தனியுடன் தொடர்புடைய இரண்டு பேர் கடந்த சில தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி,சி,ஆர். பரிசோதனையின் பின்னரே இவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த இரண்டு நபர்களும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன.
மீன் கடை கொத்தனி மற்றும் பெரண்டிக் கொத்தனியுடன் தொடர்புடைய மற்றும் நெருங்கி பழகியவர்கள்; என இது வரை சுமார் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஹட்டன்,கொட்டகலை,லிந்துலை,அக்

குறித்த பிரதேசங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1041 பேர் இது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை நுவரெலியா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா சுற்றுலா பிரதேசங்களான கெகிரிவௌ, போட் சவாரி,விக்டோரியா,அக்கல பூங்காக்கள் ஆகிய மூடப்பட்டுள்ளதாகவும் எனவே நுவரெலியா எருவரும் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.
