ஹட்டன் பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா.
ஹட்டன்; பகுதியில் மேலும் 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஹட்டன் பகுதியில் ஏழு பேரும் எபோஸ்லி பகுதியில் 03 பேருமாக மொத்தம் 10 பேர் இது வரை பி.சி.ஆர்.பரிசோதனையின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன.
ஹட்டன் மீன் வர்த்தக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகிய 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் மீன் வர்த்தகரின் குடும்பத்தில் ஐந்து பேர் அடங்குவதாகவும் ஏனையவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது,
தற்போது இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 மேற்பட்ட அங்கத்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால் ஹட்டன் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்;கை மேலும்; அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
