http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்றாளர் உறுதிபடுத்தியதை தொடர்ந்து ஹட்டன் நகருக்கு பூட்டு.

ஹட்டன் மீன் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிபடுத்தியதனை முழு ஹட்டன் நகரித்தின் வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு ஹட்டன் டிக்கோயா நகர தலைவரின் அறிவுறுத்தளுக்கமைய ஒலி பெருக்கியின் மூலம் அறிவித்ததனை தொடர்ந்து ஹட்டன் நகரத்தின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.


ஹட்டன் நகரத்தின் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங் காணப்பட்டதனை தொடர்ந்து இன்று (25) காலை ஹட்டன் நகரத்தின் பழையஇபுதிய மார்கெட் மற்றும் தொற்றாளர் சென்ற இடங்கள் மாத்திரம் காலை மூடு மாறு சுகாதார துறையினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் ஹட்டன் நகருக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற சந்தேகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரத்திற்கு வருகை தந்தனர்.


இதனால் வர்த்தக நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கூடியிருந்தனர்.
எனவே பொது மக்களின் பாதுகாப்பு கருதி இன்று (25) பகல் முதல் மறு அறிவித்தல் வரை ஹட்டன் நகரில் உள்ள சகல கடைகளும் மூடு அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
இதனால் கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *