http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தலைவாக்கலை கடையொன்றில் திடீர் தீ கொசரி விற்பனை நிலையம் முற்றாக சேதம்.

தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையம் (கொசரி) கடை ஒன்று ஏற்பட்ட தீபத்தில் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) திகதி அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தலவாக்கலை பொலிஸார் இரானுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்திள்ளனர்.


இந்த தீ சம்பவத்தில் எவருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதிலும் கடையில் உள்ள விற்பனை பொருட்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள்இஇலத்திரனியல் உபகரணங்கள் உணவு பொருட்கள் உட்பட அனைத்தும்; தீக்கிரையாகியுள்ளன.


கடை உரிமையாளர் கடையினை தாழ் இட்டு சென்ற வேளையிலேயே இந்த தீச்சம்;பவம் இடம்பெற்றுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக குறித்த தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


இத்தீபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும்இதீ ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிவது தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி;ன்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *