பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் தலைமறைவு பாதுகாவலர் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதுர்தீன் தலைமறைவானதையடுத்து அவரது பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிசாட் பதுர்தீன் அவர்களுக்கு தப்பிச்செல்ல வழிகாட்டினார் என்ற குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ரிசர்ட் பதுர்தீன் இருக்கும் இடத்தினை இவருக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்திலேயே குறித்;த பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது ரிசாட் பதுர்தீன் பயன்படுத்தியதாக கருதப்படும் இரண்டு வாகனங்கள் இரண்டு ஆயுதங்கள் இரகிசிய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
ரிசாட் பதுர்தீன் அவர்களை கைது செய்வதங்காக ஆறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பொது சொத்தகளை முறைகேடாக பயன்படுத்துதல்,தேர்தல் சட்டங்களை மீறதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து தேடப்பட்டு வருகின்றன.
