http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஸ்ரீ பாத கல்வியில் கல்லூரி தனிமைப்படுத்தம் நிலையமாக மாற்றம்.

கொட்டகலை பத்தனை ஸ்ரீ கல்வியியல் கல்லூரி தனிமைபடுத்தும் நிலையமாக இன்று (11) திகதி முதல் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் 19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் பயிலுனர் ஆசிரியர்களாக பயிற்சி பெற்று சுமார் 600 பேர் இன்று இரானுவத்தினாரால் பாதுகாப்பான முறையில் பஸ்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதியினை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த கல்லூரி தனிமை படுத்தும் நிலையமாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் இது குறித்த கடந்த சில தினங்களுக்கு முன் கல்வி அமைச்சினால் கடிதம் ஒன்று இரானும் கோரும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தாகவும். இந்நிலையில் நேற்று (10) இரானுவத்தினரால் நாளை (12) திங்கட் கிழமை பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து இன்று (11) உடனடியாக பொறுப்பேற்க போவதாக தெரிவித்ததாகவும்
பயிலுனர்களை இரானுவமே பஸ்கள் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீண்டும் கல்வியியல் கல்லூரி திறப்பது குறித்த எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *