பச்சிளம் குழந்தை தவறி கிணற்றில் வீழ்ந்து மரணம் மஸ்கெலியாவில் சம்பவம்
மஸ்கொலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா டிசையிட் தோட்டத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (09) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது,
மரணமடைந்த சிறுவன் ஜெ.வித்திஸ்பிராசாத் ஒரு வயதும் ஆறு மாதம் நிறைம்பிய குழந்தை என பொலிஸார் அடைளாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது குறித்த குழந்தை இன்று காலை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென காணாமல் போய் உள்ளது.அதனை தொடர்ந்து தேடிப்பார்த்த போது குழந்தை கையில் வைத்திருந்து பாத்திரம் கிணற்றடியில் இருப்பதனை கண்டு தாய் ஓடிப்பார்த்த போது குழந்தை கிணற்றில் வீழ்ந்து கிடப்பதனை கண்டுள்ளார் அதனை தொடர்ந்து கூச்சலிட அயலவர்கள் ஓடி வந்து குழந்தையின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தையின் உயிர் பிரிந்துள்ளதாக சம்பவத்தினை நேரல் கண்டோர் தெரிவித்தனர்.

இது குறித்த பெற்றோரிடம் வினவிய போது இரண்டரை அடி ஆழமான குறித்த கிணற்றிக்கு இதற்கு முன் குறித்த குழந்தை சென்றதன் காரணமாக மூங்கிலால் பாதுகாப்பு வேலி அமைத்து படலை ஒன்றினை போடப்பட்டுள்ளதாகவும் நீர் எடுத்த எவரோ அதனை திறந்து வைத்ததன் காரணமாக குழந்தை சென்று வீழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
