http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹோரணயில் மற்றுமொரு சிறிய கொரோனா கொத்தணி

மினுவங்கொட கதன் ஹேன வசிப்பிடமாக கொண்ட பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதை கண்டு பிடித்ததை தொடர்ந்து அவரது இரண்டு வயது குழந்தைக்கு மற்றும் அவரது மனையின் நண்பிக்கும் கொவிட் தொற்று பரவியுள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியரின் மனையின் நண்பியான பெண்மணி ஹொரண ஆதார வைத்தியசாலையில் 05 வாட்டில் பணிபுரியும் தாதி ஒருவர் என்றும் அவர் யால பகுதியில் வசிப்பிடமாக கொண்டவர் என்றும் அவ்ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் வீடு திரும்பிய நிலையில் கடந்த 03 திகதி ஏற்பட்ட நோய் காரணமாக நாகொட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அதன் போது அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று பரவியள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்கொண்ட பி.சி,அர் பரிசோதனைகளை தொடர்ந்து ஹொரண மற்றும் மாதுராவெல வைத்திய சுகாதார பிரிவுகளில் ஆறு பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஹொரண ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் வாட்டுக்கு நோயாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *