திவுலபிட்டிய மினுவங்கொட பகுதியில் 69 பேருக்கு கொரோனா தொற்று இரானுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.
திவுலபிட்டிய போபுகம்மன பகுதியில் 39 வயது பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுதியானதையடுத்து மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.ஆர்.பரிசோதனைகளில் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இரானுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் வேலை செய்த ஆடைத்தொழிற்சாலையில் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கு தற்போது கட்ட கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் பரிசோதனை முடிவுகள் 72 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதே கொவிட் தொற்றுருதியான பெண்ணின் 16 வயது மகளுக்கு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியதனை உறுதி செய்ததனையடுத்து அவர் கல்வி பாயிலும் வகுப்பு மாணவர்களும் தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பாக இது வரை கணடறியப்படவில்லை.
இமே வேளை திவுலபிட்டிய மற்றும் மீனுவங்கொட பகுதியில் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
