கோவிட் 19 தொற்று உறுதியான பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா
கம்பஹா, திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று அதிகாலை ஹபராதுவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது குறித்த மகள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைககு சென்று பி.சி,ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
