நீர்கொழும்பு கடலில் குளிக்கச்சென்ற மாயமான இளைஞர்களில் இருவர் தலைவாக்கலையைச் சேர்ந்தவர்கள் என இனங்கானப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவாக்கலை பெயாலின் தோட்டத்தைச் சேர்;ந்த முத்துகுமார் சிந்துஜன் வயது (24) மனோகரன் சசிகுமார் வயது (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றி வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (03) மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர் இந்நிலைய தீடீரென அலைக்கு சிக்குண்டு மூன்று பேர் இளைஞர்கள் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளன.

காணாமல் போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகளை நேற்று மாலை கடற்படையினரும் குழியோடிகளும் முன்னெடுத்து போதிலும் கடல் கொந்தளிப்பாக இருந்ததன் காரணமாக அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று தேடுதல் பணிகள் இடம்பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
