மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தொன்றில் பொகவந்தலா இளைஞன் மரணம்.
கண்டி மாகாண சபைக்கு முன்னால் இன்று (03) திகதி இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் பொகவந்தலா திரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கதக்க இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்றுகொண்டிருந்த வேளையில் பஸ்ஸூடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
