http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இரண்டு மணித்தியாலத்திற்கு ஒரு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நாடாக இலங்கை மாறியுள்ளது அதிர்ச்சி தகவல்

இந்நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த அதிர்ச்சியான தகவலினை வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´உங்களால் நம்ப முடியாத விடயம் ஒன்றை கூறுகிறேன். இந்த தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. இன்று இந்த நிகழ்வு 4 மணித்தியாலங்கள் இடம்பெறும். இந்த 4 மணித்தியாலங்களில் நாட்டில் எங்காவது இடங்களில் இரண்டு குழந்தைகள் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *