http://ceylononline.lk/

Ceylon Online News Portal

16 கோடி ரூபா பெறுதியான ஹெரோயின் போதை பொருளுடன் 07 பேர் கைது,

16 கோடி ரூபா அதிக பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் கிரிமெட்டியாய,வென்னப்புவ,கொஸ்வத்த உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இன்று (03) திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி போதை பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய செயப்பட்ட பொலிஸார் இவர்கள் இன்று(03) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளன.
கிரிமெட்டியாய பகுதியில் 360 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் இரண்டு கிலோ 232 ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுடன் மேற்கொண்ட விசாரணையின் போது கிரிமெட்டியாய பகுதியில் 13 கிலோ 485 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக கொழும்பு போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *