http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹட்டன் போடைஸ் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை39 ஆக அதிகரிப்பு.

ஹட்டன் போடைஸ் பஸ் விபத்தில் காயமடைந்வர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் போடைஸ் பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த பாடசாலை மாணவர்கள் உட்பட 39 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று போடைஸ் என் .சி. என்ற பிரதேசத்தில் (02) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


டயகம பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஹட்டன் ,நோர்வூட், டிக்கோயா,உள்ளிட்ட பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 24 மாணவர்களும் 25 பயணிகளுமாக 39 பேர். காணமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்தினை நேரில் கண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் பின்னால் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென வந்த பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
அதனை தொடர்;ந்து நானும் வாகனங்களில் வந்தவர்களும் உடனடியாக காயமடைந்தவர்களை வாகனங்களில் ஏற்றி; வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம்.


இது தொடர்பாக பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் கருத்து தெரிவிக்கையில் இன்று ஏதாவது விபத்து நடத்தால் சாரதியை தான் குறை சொல்லுகிறார்கள் ஆனால் இந்த வீதியில் வாகனம் செலுத்தியவன் என்ற ரீதியில் சொல்கிறேன.; இந்த பல வருட காலமாக மிக மோசமான நிலையில் தான் உள்ளது,இதில் பல பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


இது குறித்து பல அரசியல் தலைவர்களிடமும் பொறுப்பு வாய்ந்தவர்களிடமும் தெரிவித்திருக்கிறோம் ஆனால் எவரும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று இந்த வீதியில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.பல இடங்களில் வீதியில் வெப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் பாரிய குழிகள் காணப்படுகின்றன.ஒரு வாகனம் வரும் போது மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிட முடியாது அதனால் சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த வீதியினை தான் டயகம,அக்கரபத்தனை,மன்ராசி போடைஸ் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த வீதியினை புனரமைத்துதர நடவடிக்கை எடுக்கு வேண்டும். இல்லாவிட்டால் பாரா ஊர்திகள் செல்வதை தடை செய்ய வேண்டும் அப்படி இல்லாவிட்டால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவது எவராலும் தடுக்க முடியாது என பலரும் தெரிவிக்கின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *