http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பின்னணி பாடகர் பாலாவுக்கு மலையகமெங்கும் கண்ணீர் அஞ்சலி

இந்திய பின்னணி பாடகர் பாலசுப்பிரமணி நேற்று இந்திய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தார். அவருடைய பூதவூடல் இன்று இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று (26) திகதி அவரின் ரசிகர்கள் மலையகமெங்கும் பல்வேறு பகுதிகளில் தமது கண்ணீர் அஞ்சலியினை செலுத்திவருகின்றனர்.


மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தின் இளைஞர்கள்,முதியவர்கள் சிறுவர்கள் என அவரின் ரசிகர்கள் ஒழுங்கு செய்திருந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் வெள்ளை கறுப்பு கொடிகள் கட்டி அவரது உருவ படத்திற்கு மாலையிட்டு விளக்கேற்றி,உருக்கமான இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.


எஸ் பி. பாலசுப்பிரமணியத்தின் பூதவூடல் சென்னையில் உள்ள செங்குன்றம் தாமரைப்பாக்கம் பக்கம் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பாடகரும் நடிகருமான பாலசுப்பிரமணியம்,சிகிச்சை பலனின்றி 74 வயதில் நேற்று (25) மரணமடைந்தார்.
இவர் 1966 ஆண்டு திரை உலகிக்கு வருகை தந்து 16 மொழிகளில் 42 ஆயிரம் பாடலகளைப் பாடி உலக வாழ் அனைத்தின மக்களினதும் உள்ளங்களை கொள்ளைக் கொண்டுள்ளார் அதனால் இன்று அவரது இறப்பினை கேட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு இரங்கல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *