தோட்ட முகாமையாளரின் அடாவடி தனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பு 17 வது நாளாகவும் தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்.திங்கள் முடிவில்லை என்றால் உண்ணாவிரதம் தொழிலாளர்கள் எச்சரிக்கை.
நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 17 வது நாளாகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்ததோட்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு எதிராக 17 கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டத்திலும் சத்தியாகிரக போராடடத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இத் தோட்டத்தில் ஆரம்ப பிள்ளைகளை கூட்டிச்செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாவலர் இடைநிறுத்தம்,தேயிலை மலைகளுக்கு வேறு தோட்டங்களில் உள்ளவர்களை கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க ஈடுபடுத்தல்,அதிகமானவர்களுக்கு வழமையாகவே அரைநாள் பேர் வழங்குதல்,குழந்தை பால்மா இடைநிறுத்தல்,குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாயர்களை தேயிலை தளிர் இல்லாத மலைகளில் வேலைக்கு அமர்த்தி 18 கிலோ தேயிலை பறிக்க வலுக்கட்டாயமாக வலியுறுத்தல்,தொழிலாளர்களை அவமரியாதையாக பேசுதல்,ஓய்வு பெற்றவர்களை மீண்டும் சேவையில் குறைந்த சம்பளத்திற்கு ஈடுபடுத்தல் தோட்ட முகாமையாளரை மாற்ற வேண்டும். உள்ளிட்ட 17 கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இந்த தோட்டத்தை நம்பிதான் வேலை செய்து வருகிறோம் மாதம் முழுவதும் வேலை செய்து 40 ரூபா 50 ரூபா தான் சம்பளம் இந் நிலையில் நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு வரும் போது பாடசாலையில் அதை வாங்கி வரச்சொன்னார்கள் இதை வாங்கி வரச்சொன்னார்கள் என்கிறார்கள் நாங்கள் இந்த சம்பளத்தினை வைத்து எவ்வாறு அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பது இந்த முகாமையளார் நாள் முழுவதும் பறித்து வந்து கொழுந்துக்கு அரைநாள் பேர் போடுகிறார். ஆகவே எங்களுக்கு உயிர் வாழ்வதற்கு கூட சம்பளம் போதாது அந்த நிலையில் எவ்வாறு நாங்கள் வேலை செய்வது,அது மாத்திமின்றி நல்ல கொழுந்துள்ள மலைகளை ஏனையவர்களுக்கு கைகாசுக்கொடுத்து விட்டு கொழுந்து இல்லாத மலைகளை எங்களுக்கு தருகிறார் அதில் நாங்கள் எவ்வாறு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிப்பது? கடந்த மூன்றரை வருடகாலமாக எங்களுக்கு ஆயுள் காப்புறுதி பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் எங்களது எத்தனையோ பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்,எத்தனையோ பேர் காயங்களுக்கும் விபத்துக்களுக்கும் உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஆனால,; இதுவரை எவ்வித காப்புறுதி நஷ்ட்ட ஈடும் வழங்கப்பட்வில்லை இன்று எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் மா கூட நிறுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்களுக்கு கொடுக்கும் தேயிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த முகாமையாளர் தான் என்ன நினைக்கிறாரோ அதை அத்தனை செய்து வருகிறார்,ஆகவே இன்று பலர் தோட்டத்தில் வேலை வேண்டாம் எழுதியே கொடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இருக்கும் வேலையினையும் இழந்து நாங்கள் என்ன செய்வது. ஆகவே இவரை உடனடியாக இடம் மாற்றி வேறு ஒரு வரை பெற்றுத் தந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இன்று தொழிற்சங்க வாதிகள் வருகிறார்கள்,அரசியல் வாதிகள் வருகிறார்கள் மக்கள் பிரதிநிதிகள் வருகிறார்கள். பார்க்கிறார்கள் அறிக்கை விடுகிறார்கள் .ஆனால் எவ்வித தீர்வுமில்லை ஆகவே திங்கட் கிழமை தீர்வு இல்லாவிட்டால் இந்த போராட்டத்தினை உண்ணாவிரத போராட்டமாக திங்கள் முதல் முன்னெடுக்க போவதாக இவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்விடத்துக்கு விஜயம் செய்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த 16 17 தினங்களாக 17 கோரிக்கைகளை முன்வைத்து சாத்வீக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.இது வேறு போராட்டங்களாக மாறுவதற்கு முன் இதனை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.அதனை தோட்ட முகாமையாளர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அதே நேரம் நான் இன்று தோட்ட சிரேஸ்ட்ட முகாமையாளருடன் பேசினேன். ஆகவே துறைமார்களின் கெடுபிடிகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேசவுள்ளோம்.

இது தொடர்பாக தோட்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் பேசினேன் அதற்கு அவர்கள் திங்கட் கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளார்கள.; ஆகவே திங்கள் செவ்வாய் கிழமைகளில் உங்கள் அதிகமான பிரச்சினைகளுக்கு விடை கிடைத்து விடும் நல்ல தீர்வு கிடைக்கும் என்றே நம்புகிறேன். அது மட்டுடல்லாது நான் இப்போது பசில் ராஜபக்ஸ்வுடனும் ரொசான் ராஜதுறையுடனும் பேசுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் தொலை பேசி அழைப்பு கிடைக்கவில்லை.ஆகவே இதனை அரசாங்கத்துடன் பேசி நல்லதொரு முடிவினை பெற்றுக்கொடுப்போம்; இல்லாவிட்டால் பாரிய அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என அவர் இதன் போது தெரிவித்தார்..
