http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 58.18 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,141 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *