http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நீண்டகாலமாக புனரமக்கப்படாத மேல் தும்புறுகிரிய வீதி புனரமைப்பு.

ஹட்டன் நகர பிரதேசத்தில் அமைந்துள்ள அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான மேல் தும்புறுகிரிய வீதியின் ஒரு பகுதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும். குழியுமாகவே காணப்பட்டன குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு ஹட்டன் தும்புறுகிரிய அபிவிருத்தி சங்கம் பிரதேச செயலகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் ஒரு லட்சம் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பாதை புனரமைக்க இன்று (24) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.


ஹட்டன் நகர சபைக்குட்பட்ட பாதைகளில் பெரும்பாலான பாதைகள் புனரமைக்கப்பட்ட போதிலும் குறித்த பாதை எல்லை நிர்னயத்தின் போது அம்பகமுவ பிரதேசத்திற்கு சென்றமையினால் குறித்த பாதையினை புனரமைக்க தாமதமாகியதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றன.


குறித்த பாதையினை புனரமைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபா அரசாங்கம் செலவிடுகிறது இந்த பாதையினை புனரமைப்பதன் மூலம் இந்த பிரதேசத்தில் வாழும் பல குடும்பங்கள் நன்மையடைகின்றனர்.


தும்புறுகிரிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிராம சேவகர் சுவர்ணலதா,அம்பகமுவ பிரதேச சபையின் அதிகாரிகள்,முன்னாள் ஹட்டன் வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் மெய்யநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *