சைபர் உலகிக்கு சிறகுகள் பாடசாலைகள் இணைத்தின் மூலம் இணைப்பு.
கல்வி அமைச்சி வெப்கொம் கோபல் நிறுவனத்துடன் இணைந்து நவீன உலகிக்கு ஏற்ற வகையில் மாணவர்களையும் கல்வி நடவடிக்கைகளையும் தயார் செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சைபர் உலகிக்கு சிறகுகள் எனும் தொனிப்பொருளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இணையத்தின் மூலம் ஒன்றிணைத்து அதனூடக நவீன உலகிக்கு ஏற்ற வகையில் தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணைய வலையமைப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன் பரீட்சார்த்த செயல்முறை செயலமர்வு ஒன்று கடந்த 21 ம திகதி தொடக்கம் ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் அவர்களின் வழிகாட்டலில் முதற்கட்டமாக கினிகத்தேனை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் எவ்வாறு இணையத்தளங்களை உருவாக்குது அதனை எவ்வாறு நடைமுறை படுத்துவது அதனூடாக எவ்வாறு பாடசாலைகளை இணைத்து கல்வி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் உலகிக்கு ஏற்ற வகையில் முன்னெடுப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த தகவல் தொழிநுட்ப ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் இப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன் போது மாணவர்கள் சுயமான இணையதளமொன்றினை உருவாக்கி அதனை நடைமுறைபடுத்துவது தொடர்பாகவும் அதனை பாடசாலைகளில் முன்னெடுப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்டன.

குறித்த நடவடிக்கைகாக ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 22 தமிழ் மொழிமூல பாடசாலைகளும்,08 சிங்கள மொழிமூல பாடசாலைகளும் மொத்தம் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சிங்கள மாணவர்களுக்குரிய பயிற்சி நெறியே நேற்று (23) நிறைவு பெற்றன.தமிழ் மொழிமூல மாணவர்களுக்குரிய பயிற்சி நெறி எதிர்வரும் 28 ம் திகதி ஹட்டன கல்வி வலயத்திற்குட்பட்ட குயில்வத்தை தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.
இதற்கான டொமையின் பெற்றுக்கொள்வதற்கான அனுசரனையினை ..டம னுழஅயin என்ற நிறுவனம் வழங்கியுள்ளன.இந்த செயத்திட்டம் கம்பளை,ஹட்டன்,தெஹியஓவிட்ட,குருணாகலை,ஆகிய கல்வி வலயங்களில் பரீட்சார்த்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுக்கு ஹட்டன் கல்வி வலயத்தின் தகவல் தொழிநுட்ப பாட இணைப்பாளர் டப்ளியு.கே.எம்.போதரகம வெப் கோபல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் எம்.எம்.ரஞ்சித் பியங்கர பணிப்பாளர் தரங்க நுவன்,தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர் ஹேமால் கவிராஜ்,பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் ஆகியோர் உட்பட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்த வெப் கோபல் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பிரியங்கர கருத்து தெரிவிக்கையில்..
கல்வி அமைச்சுடன் இணைந்து தான் இந்த வேளைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். இதில் விஸ்வ உலகிக்கு சம உரிமை என்ற எண்ணத்துடன் சகல பாடசாலைகளுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டு சகல பாடசாலைகளிலும் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக நவீன கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இங்கு வரும் வரை இணையத்தளம் ஒன்றினை உருவாக்குத் திறனை பெற்றிருக்கவில்லை. இன்று எங்களுக்கு தனியாக ஒரு இணையத்தளத்தின உருவாக்க முடியும் இதனூடாக நவீன உலகுடன் எமக்கு இணைய கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இது குறித்து எங்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என தெரிவித்தனர்.
