8 மணி நேர நீர்வெட்டு; தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு
சில பகுதிகளில் இன்று (21) 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வத்தளை, தெலங்கபாத, எவரிவத்த, ஹேகித்த, பள்ளியவத்த மற்றும் எலகந்த பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
