மலையத்தில் கடும் மழை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் ஒரு வான்கதவு திறப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.கடும் மழை காரணமாக மேல்; கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்கிளயார் நீர் வீழ்ச்சியில் நீர் மட்டமும் அதிகரித்துள்ளன.
எனவே மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக வாழுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்;.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் மழை காரணமாக கெனியோன் மற்றும் லக்ஸபான ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.அத்தோடு விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று அதிகாலை முதல் வான் பாய்ந்து வருகின்றது
காசல்ரி,மவுசாகலை,மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதனால் ஹட்டன் கொழுமபு; மற்றும் ஹட்;டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.எனவே இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை அடை மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் தேயிலை தொழில் ஈடுபடுபவர்களின் வருகை குறைவாக காணப்படுகின்றமையினால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்;ச்சியாக மழை பெய்து வருவதனால் கால் நடை வளர்ப்பாளர்கள் தங்களின் கால்நடைகளுக்கு புல் அறுக்க முடியாது மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு அதிக மழை வீழ்ச்சி காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
