ஐக்கிய தேசிய கட்சியின் தொடர் வீழ்ச்சிக்கு ரணில்விக்கிரசிங்க அவர்களின் விட்டுக்கொடுப்பு இன்மையே காரணம். பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வி.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.
ஐக்கிய தேசிய கட்சி பிரபலமான கட்சியாக இருந்தாலும் இன்று அது தனது செல்வாக்கினை தொடர்ந்து இழந்து வருகிறது அதற்கு பிரதான காரணமாக அமைவது அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க அவர்களின் விட்டுக்கொடுப்பு இன்மையே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியில் புதியதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரம் மற்றும் பிரதித்தலைவர் எல்.லோரன்ஸ்,நிதிச்செயலாளர் கிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் பதவியேற்கும் வைபவம் இன்று (16) விசேட பூஜை வழிபாடுகளுடன் மலையக மக்கள் முன்னணியின் பிரதான அலுவலகமான ஹட்டன் அலுவலக்த்தில் நடைபெற்றது. அதில் கலந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் பாதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அவர் இப்போது கூட அந்த கட்சியில் பிரதி தலைவரை உருவாக்கினாரே தவிர தன்னுடைய பதவியை அவர் விட்டுக்கொடுக்கவில்லை.இது இன்னம் அவர்களை வீழ்ச்சிக்கு கொண்டு வருமே தவிர அது கட்சியை வளர்க்காது அதே நேரம் இன்று ரூவன்விஜயவர்தன கட்சியை புனரமைப்பதாகவும் அதற்கு ஏனையவர்களை இணைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார.; அதில் ஐக்கிய மக்கள் சக்தியே தான் தீர்மானிக்கும் அதற்கு எமக்கு தொடர்பு கிடையாது. என தெரிவித்த அவர் கடந்த தேர்தலின் போது நாங்கள் தெரிவித்திருந்தோம் மலையக மக்கள் முன்னணி மறுசீரமைக்கப்படும் என்று அதற்கமைய இன்று திரு விஜயசந்திரம் அவர்கள் பொதுச்செலாளராக பதவியேற்றுள்ளார.; மலையகத்தில் முதன் முறையாக ஒரு பேராசியர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக வருவது இதுவே முதல் தடைவை மலையக மக்களின் தேவை கருதி கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன அதில் முதற் கட்டமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.எதிர்காலத்தில் எமது மக்களின் தேவைக்கேற்ப முழு மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று பாதுகாப்பு செயலாளர் திலிபனின் மரணம் தொடர்பாக பாதுகாப்புச்செயலாளர் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் ஏனைய கைதிகள் சாப்பாட்டுக்காக உண்ணாவிரதத்தினை மாற்றிக்கொள்ளும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.ஆனால் தனது இனத்திற்க்காக உண்ணவிரதம் இருந்து உயிர் நீத்தவர் அவருடைய நினைவு தினத்தினை கூட கொண்டாடுவதை அரசாங்கம் இன்று தடை செய்து வருகிறது.அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.தியாகிகளுக்கு அவர்களை நினைவு கூறுவதற்கான வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும.; என்பது தான் மலையக மக்கள் முன்னணயின் நிலைப்பாடு.இன்று அரசாங்கம் 20 தாவுது திருத்த சட்டமூலத்தினை கொண்டு வந்துள்ளது. இன்று அதனை கொண்டுவந்தவர் யார் என்று தெரியாத ஒரு நிலையுள்ளது. எது எவ்வாறான போதிலும் பல திருத்தங்களுடன் தான் பாராளுமன்றத்திற்கு அச்சட்டமூலம் வரப்போகிறது அதனை தொடர்நது என்ன செய்துவது நாங்கள் தீர்மானிப்போம். அதே நேரம் அரசாங்கம் தேர்தலின் போது தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தால் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படும் என்பதற்கமைவாகவே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது.ஆனால் இந்த நாட்டுக்கு என்ன தேவை மக்களுடைய அபிலாசைகள் என்ன என்பதற்கு அரசாங்கம் இரண்டாம் பட்சமாக யோசிக்கிறது. இன்று வடகிழக்க எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தை எடுத்துக்கொண்டாலும் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கே முன்னுரிமை வழங்க வேண்டும.; அதற்கு முட்டுகட்டையாக இருந்து மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. இன்று அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றாலும் கூட மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மாறாக பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன ஆகவே பாராளுமன்றத்தில் மக்கள் சார்ந்த விடயங்கள் வரும் போது நாங்கள் ஆதரவளிப்போம் மக்களுக்கு பாதகம் ஏற்படும் போது அதனை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம.; என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
