http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 11 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் நிவ்வெளிகம பகுதியில் இன்று (15) காலை 7.30 மணியளவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதில் பயணஞ் செய்த 11 டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும்இ பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ்ஸும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் மூன்று பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பி சென்றுள்ளதாகவும் ஏனைய 08 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலரி,பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்;படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *