http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பேருந்து முன்னுரிமை சட்டம் இன்று முதல் அமுல் மீறும் சாரதிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் இன்று (14) முதல் அமுல்படுத்தப்படுகின்றது
4 பிரதான வீதிகளை மையப்படுத்தி காலி வீதி ஹெவலொக் வீதி ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி முதல் கோட்டை வரையிலான இந்த செயற்பாடு அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட்ட காவல்துறை மா அதிபர்.தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமுல்படுத்தப்படுகின்ற வீதி ஒழுங்கு விதிகளை முறையான கடைப்பிடிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *