http://ceylononline.lk/

Ceylon Online News Portal

லடியா என்பருவக்கு சொந்தமான மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான மூன்று பஸ்கள் கண்டுபிடிப்பு.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் தற்போது இந்தியாவில் சென்று தலைமறைவாகியிருக்கும் தினமுள்ள கங்கானம்கே நலின் சத்துரங்க லடியா என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமான ஓரு கோடியே 50 லட்சம் பெறுமதியான மூன்று பஸ்கள் அத்துருகிரிய பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பஸ்களுடன் லடியாவின் உறவினர் ஒருவரும் அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு நபர்களும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று பஸ்களில் இரண்டு சிறிய சொகுசு பஸ்களும் ,ஒரு லேலன்ட் பஸ் அடங்குவதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *