பறித்த தேயிலை கொழுந்தினை நிறுக்காததால் தோட்ட காரியாலயத்தில் கொட்டி எதிர்ப்பு நடவடிக்கை.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரதன் தோட்டத்திற்கு சொந்தமான செம்புவத்தை தோட்டத்தில் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தினை நிறுக்காததால் தொழிலாளர்கள் இன்று (11) திகதி ஸ்ரதன் தோட்ட காரியாலயத்தின் விறாந்தையில் கொட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் தொழிலாளர்களை கடந்த சில மாத காலமாக முகாமையாளர் தேயிலை கொழுந்து குறைந்த மலைகளில் பறிக்கச்சொல்வதாகவும், அவ்வாறு பறிக்கும் போது கொழுந்து குறைந்தால் அறை நாள் பேர் மாத்திரம் வழங்கப்படுவதாகவும், இதனால் தொழிலாளர்கள் இருபது நாள் வேலை செய்தாலும் 10 நாட்கள் மாத்திரம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், நன்றாக தேயிலை கொழுந்துள்ள தேயிலை மலைகளை அதே தோட்டத்தில் உள்ள ஏனைய பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை பயன்படுத்தி கொழுந்து பறித்து வருவதாகவும் இதனால் செம்புவத்தை பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து முகாமையாளரிடம் முறையிட சென்றால் நான் சொல்வதை தான் செய்ய வேண்டும் இப்போது கடந்த அரசாங்கத்தைப்போல் நீங்கள் ஆட முடியாது என அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் நல்ல தேயிலை கொழுந்து உள்ள மலையினை மாற்றுத்தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கியதன் காரணமாக தாங்கள் பலவந்தமாக கொழுந்து பறித்ததன் காரணமாகவே இன்றைய தினம் கொழுந்து நிறையிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரம் குறித்த தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நுPகுஇநுனுகு;; பணம் அனுப்பப்படவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்தும் அதே வேளை இந்த தோட்டத்தில் மாத்திரம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரைநாள் பேர் வழங்கி ஏனைய மேலதிக தேயிலை கொழுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 40 வழங்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தொழிற்சங்கங்கள்; பி
ரிதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் வந்து கலந்துரையாடிய போதிலும் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை உடனடியாக தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எனவே தொழிலாளர்களுடன் கலந்துரையாட முகாமையாளரை உடன் மாற்ற வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

இது குறித்த முகாமையாளரை தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் அதற்கு சந்தர்ப்பம் கிட்டவி;ல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
