MT நிவ் டயமன் கப்பல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தகவல்.
MT நிவ் டயமன் கப்பலில் ஏற்பட்ட தீயினை முழமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும்,தற்போது புகை மற்றும் ஏற்பட்டிருப்பதாகவும் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலையினால் மீண்டும் தீ ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் மசகு எண்ணெய் கடலில் கலப்பதனை தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கடல் பரப்பில் ஏற்படவிருந்த நீர் மாசடைதல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 திகதி அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறைக்கு 40 கடல் மையில் தொலைவில் குறித்த கப்பல் தீடீரென தீப்பற்றிக்கொண்டது.

பனாமா நாட்டுக்கு சொந்தமான குறித்த கப்பல் இந்தியவுக்கு 2 லட்சத்து 70 மெட்ரிக்தொன் மசகு எண்ணெய் எடுத்துச்சென்றுகொண்டிருந்த வேளையிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இலங்கை கடற்படை,விமானப்படை,துறைமுக ஆணையம்,இந்திய கடற்படை,இந்திய கடலோறக் காவல்படை ஆகியன இணைந்து பாரிய பிரயத்தனத்தின் பின் தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன.
இக்கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்ற பட்டுள்ளனர்,ஒரு மாயமான நிலையில் அவர் இறந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் பின்னர் தெரிவித்தனர்,
இக்கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைப்பதற்காக இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தினை அறவிடுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
