அறச்செயப்பாடுகளை முன்னெடுக்க மலையகத்தில் ஐயப்ப சுவாமிகள் ஒன்றியம் உதயம்.
சபரிமலை ஐயப்ப சுவாமிகளுக்கு மாலை அணியும் சபரி மலை பக்தர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவும் மலையகப்பகுதியில் அறம் சார்ந்த செயப்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் அகில இலங்கை மலையக குருசுவாமிகள் ஒன்றியம் என்ற பெயரில் இன்று (06) ஹட்டன் வில்பர்ட்புரம் அம்மன் ஆலய மண்டபத்தில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவராக நுவரெலியாவை சேர்ந்த தங்கவேலு சன்முகராஜா,செயலாளராக பாலகிருஸ்ணன் சந்தரமூர்த்தி பொருளாளராக குமாரவேல் சுபாகர் ஆகியோர் இதன் போது தெரிவு செய்யப்பட்டன.

இந்த அமைப்புக்கு ஆலோசனை குழு ஒன்றும் இதன் போது உருவாக்கப்பட்டன.
இந்த அங்குரார்பண நிகழ்வுக்கு ஹட்டன் நுவரெலியா, பதுளை, ராகலை, பண்டாரவலை,கண்டி,அவிசாவலை,உள்ளிட்டு பல மாவட்டங்களிலிருந்து ஐயப்ப சுவாமி குருசாமிகள்; கலந்து கொண்டிருந்தனர்.

இதன் முதல் செய்யப்பாடாக எதிர்வரும் ஐயப்ப சமாமிகள் தரிசனம் செய்ய மலைக்கு செல்பவர்கள் கொரோனா அச்சுறுத்தல் தொடருமேயானால் மாலை அணியாமல் எவ்வாறு இங்கிருந்தவாறே விரதத்தினை கடைப்பிடிப்பது.மலையக்கு செல்பவர்களின் டிக்கட்,மற்றும் விசா பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது,மலையக பகுதியில் இந்து சமயம் சார்ந்த அறசெயப்பாடுகள் முன்னெடுப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இது குறித்து அதன் தலைவர் தங்கவேலு சண்முகராஜா கருத்து தெரிவிக்கையில்; மலையகத்திலிருந்து ஐயப்ப தரிசனத்திற்காக செல்லும் ஐயப்பபக்தர்கள் டிக்கட் நிதி,விசா பிரச்சினைகள் அரச நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்த்து கொள்ள முடியாமல் பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஆகவே அவ்வாறான பிரிச்சினைகளை இனங்கண்டுஅவற்றினை இலகுவாக தீர்ப்பதற்கும்,எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள சபரிமலைய யாத்திரை கொரோனா தொற்று காரணமாக நிலைமை சரியாகாவிட்டால் எவ்வாறு அந்த விரதத்தினை மேற்கொள்வது என்பது தொடர்பாக முடிவுகளை எடுக்கவுள்ளோம்.அதே நேரம் இவ்வமைப்பின் ஊடாக மலையகத்தில் அறப்பணிகளை முன்னெடுத்து சமயத்தினை மேம்பட செயப்பட போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
