http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒரு முறை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும்! மருத்துவர்கள் உறுதி

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபடியும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹாங்காங் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஹாங்காங்கில், 33 வயதான நபர் ஒருவருக்கு இவ்வாறு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், கொரோனா தொற்றுக்குள்ளான இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி, தனது பணி நிமித்தமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஸ்பெயின் சென்ற அவர், பிறகு இங்கிலாந்து வந்து, அடுத்து ஹாங்காங் வந்துள்ளார்.

சொந்த நாட்டை வந்தடைந்த சில நாட்களில் அவருக்கு மறுபடியும் கொரோனா அறிகுறிகள் தென்படவே, மருத்துவ பரிசோதனை செய்த பொழுது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை, ஹாங்காங் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை என்றால் இந்த உலகை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *