http://ceylononline.lk/

Ceylon Online News Portal

லிந்துல அக்கரபத்தனை வீதி ஒரு வாரத்திற்கு மூடப்படும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை.

லிந்துல அக்கரபத்தனை ஊடன வீதி ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
லிந்துல டயகம ஊடான பிரதான வீதியில் மன்ராசி நகருக்கருகாமையில் அமைந்தள்ள 14/6 இலக்கம் கொண்ட பாலம் திருத்து வேலை காரணமாக குறித்த வீதியினை 25.08.2020 தொடக்கம்.31.08.2020 மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தினமின பத்திரிகையில் கடந்த 22 திகதி பிரசுரிககப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.
குறித்த வீதியினூடாக அக்கரபத்தனைக்கும் டயகமவுக்கும் இடை பட்ட பகுதியில் 29 இற்கும் மேற்பட்ட தோட்டங்கள் உள்ளன.இந்த பகுதியில் வாழும் சுமார் 38000 மேற்பட்ட மக்கள் லிந்துல, தலவாக்லை, நுவரெலியா, கண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு நாளாந்தம் இந்த வீதியினையே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இவ்வீதி மூடப்படுவதனால் லிந்துல பகுதியிலிருந்து டயகம வரும் வாகனங்கள்;;, ஹோல்புறுக் பச்சபங்கள வீதியினையும் ஹட்டன் போடைஸ் ஊடான வீதியினையும் மாற்று வீதிகளாக பயன்படுத்த முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் தற்போது பார ஊர்திகள் செல்வதனை இன்று (25) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டிகள் மாத்திரம் இடைக்கிடையே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு தலவாக்கலையிலிருந்து வரும் பஸ்கள் மற்றும் டயகம பகுதியிவிருந்து வரும் பஸ்கள் மன்ராசி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இரு பகுதியிலும் இருந்து வரும் பொது மக்கள் பாலத்தினை கடந்து தங்களது பயன்ததினை தொடர முடியும்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *