http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்றது.

 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் நசீர் அஹமட்  இது  குறித்து கூறுகையில்,

13 மற்றும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும்,  இந்தத் திருத்தங்கள் மாற்றப்படுவதன் மூலம் சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும், பாதிப்புகள் ஏற்படாதவாறு இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹாபிஸ் நசீர் அஹமட், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *