http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அங்கொட லொக்காவின் உதவியாளரான தாபிதீன் வெளிநாட்டிற்கு தப்ப முற்பட்டபோது கைது

பதாள உலக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் நான்கு பேர்  டுபாய்க்கு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபரில், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த  அங்கொட லொக்காவின் உதவியாளரான தாபிதீன் மொஹம்மட் சுபைர்,  மற்றும்  ‘வெல்லே சாரங்க’   உள்ளடங்குவதாக  பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேக நபர் ஹங்வெல்லை – மக்கள் வங்கிக் கொள்ளையின் பிரதான சந்தேக நபர் எனக் கூறும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.

மற்றொரு சந்தேக நபர் முகத்துவாரம்  பகுதியைச் சேர்ந்தவர் எனவும்  பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் போதைப் பொருள் விற்பனையின் பிரதான சந்தேக நபர்கள் வெல்லே சாரங்க என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் எனும் சந்தேக நபர் நாட்டிற்கு கேரள கஞ்சாவை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவிகின்றனர். 

மேலும் பிரான்சில் வசிக்கும் பாதாள உலக குழுவின் உறுப்பினர் ரூபன் என்பவரின்  உதவியாளர் ஒருவரும் இந்த சந்தேக நபர்களில் அடங்குவர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து  3 மில்லியன்  பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார்  கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *