புகைப்படத்தால் புதுயுகம் படைபோம்! தலவாக்கலை புகைப்படக்கண்காட்சி
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்கள்; அரசியல் பொருளாதாரம், சமயம், சுற்றுப்புற சூழல,; தொழில்,கலை கலாசாரம் ஆகிய உள்ளடக்கிய வகையில் புகைப்படத்தால் புதுயுகம் படைப்போம.; எனும் தொனிப்பொருளில் புகைப்படக்கண்காட்சி ஒன்று இன்று (23) தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கண்காட்சியினை தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி,இராதாகிருஸணன், பதுளை பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

கொவிட் 19 சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக அமைக்கப்பட்டுள்ள குறித்த கண்காட்சியில் மலையக மக்களின் வாழ்கையில் காணப்படும் துன்பங்கள் மற்றும் அவர்கள் படும் அவலங்கள்,வாழ்விட பிரச்சினைகள்,கல்வி கற்பதில் உள்ள சிரமங்கள் போன்றன புகைப்படங்களாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த புகைப்;படங்களை மலையகத்தில் உள்ள நான்கு தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் ஹொலிரூட்,லோகி,ஊவா,ஹைலன்ட்,அட்டம்பிட்டிய ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியல் அம்சங்களை புகைப்படங்கனாக தொகுத்துள்ளனர்.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஒழுங்கு செய்திருந்த இக்கண்காட்சிக்கு லிந்துல தலவாக்கலை நகர சபையின் தலைவர்,அசோக சேபால,மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்நாதன் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

