ஆவனி சதுர்த்தியினை முன்னிட்டு மலையக இந்து ஆலயங்களில் விழா கோலம்.
ஆவனி சதுர்த்தியினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விழா கோலம் பூண்டிருந்தன.

ஆலயங்கள் மாவிலை,வாழை,பாலை ஆகியன கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் சில ஆலயங்களில் தேர் பவனியும் இடம் பெற்றன.

விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் நெய் விளக்கேற்றி, சிதரு தேங்காய் அடித்து மனம் உருகி வழிபட்டனர்.
