இந்திய மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 50 வயதுக்கு மேற்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவு
இந்திய மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது அதுபோல் அங்கு இறப்பு எண்ணிக்கை விகிதத்தில் ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறார்கள்.
எனவே வீடுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதைவிட மேற்கூறிய வயதிற்கு உட்பட்டவர்கள் அறிகுறி இருந்தாலும், அறிகுறி இல்லாதவர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க, மருத்துவமனை இடமளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14000 மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது

