அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை: நிதி அமைச்சு அறிவிப்பு
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் 2015 பின்னர் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நிதி அமைச்சால் நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்னாயக்க, செயலாளராக நிதி அமைச்சின் உறுப்பினர் ஒருவர், மேலும் குழு உறுப்பினர்களான பட்டய கணக்காளர் சுசந்தத சில்வா, ஓய்வுபெற்ற மேலதிக கணக்காய்வாளர் நாயகம் டபுள்யூ. பிரேமாநந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு அரச வங்கிகளின் நிதி மோசடிகளை ஆராய்ந்து மூன்று மாதங்களுக்கு இடையில் அறிக்கை அறிக்கையை அமைச்சரவையில் ர்சமர்ப்பிக்கப்பட உள்ளது
